Monday, October 29, 2007

இந்துக்கள் மனதைப் புண்படுத்துவது என்றால் என்ன?

கொஞ்ச நாளா எங்க பாத்தாலும், "இந்துக்கள் மனதைப் புண்படுத்தி விட்டார், பண்படுத்தி விட்டார்"ன்னு ஒரே இரைச்சல்.

அதுவும், தினமலர், துக்ளக் போன்ற அதிமேதாவிப் பத்திரிக்கைகளும், டெகல்கா புகழ் பி.ஜே.பி, ஒரு ஓட்டு சுப்பிரமணியம் சாமி இவங்க இரவு பாதியில் முழித்தால் கூட இதைச் சொல்லித் தான் அலறுகிறார்கள்.

(கொசுறு செய்தி: ஒரு ஓட்டு சுப்பிரமணியம் சாமி என்று அந்தக் கோமாளிக்கு பட்டம் கொடுத்தது நம்ம வெற்றி கொண்டான். "அவன் செத்தா, அவனே எந்திரிச்சி அழுதுட்டு, அப்புறம் அவனே போய் படுத்துக்கணும்" என்று கவுண்டமணி ஸ்டைலில் சு.சாமியை ஒரு பொதுக் கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார்)


எனக்கும் ரொம்ப நாளா ஒரு கேள்வி இருந்துட்டே இருந்தது. "இந்துக்கள் மனதைப் புண்படுத்துவது என்றால் தான் என்ன?" நிறைய பேரிடம் கேட்டு விட்டேன். தெளிவான பதில் இல்லை.


சமீபத்தில் ஒரு வலைப்பதிவை படிக்கும் போது, ஒரு நண்பர், "நீங்கள் ராமர் பாலத்தை நம்புகிறீர்கள். அது ராமர் கட்டியது இல்லை என்று சொல்லுவது, எங்கள் மனதை புண்படுத்துகிறது என்று சொல்கிறீர்கள். நான் ராமரையோ அவர் பாலம் கட்டியதாகவோ நம்புவதில்லை. ஆனால் நீங்கள் அந்த மணல் மேடு ராமர் கட்டியது என்று சொல்வது என் நம்பிக்கையை புண்படுத்துவதாகாதா?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்........... இது எப்படி இருக்கு?


இருந்தாலும் இன்னும் கன்வின்ஸ் ஆகவில்லை. "இந்துக்கள் மனதைப் புண்படுத்துவது என்றால் தான் என்ன?" தெரிந்தவர்கள் சொல்லவும்.

11 comments:

pulliraja said...

உடனே விசயத்தை வேண்டுமானால் சொல்ல முடியும், அனா இதை புரிஞ்சுக்கிற சக்தியை உனக்கு இனிமேல் ஆண்டவன் தான் தரவேண்டுமப்பா.

? said...

இந்துக்கள் மனதைப் புண்படுத்தி விட்டார்" என்றால் என்ன எனப் புரிந்து கொள்ள முதலில் முஸ்லிம்கள் மனதைப் புண்படுத்தி விட்டார் என்றால் என்ன எனப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமிய மதம் பற்றி ஏதாவது சொல்லிவ்ட்டு உமது முகவரி கொடும்.அவர்களே உம்து இருப்பிடம் வந்து கற்றுத் தருவார்கள். யார் கண்டது... பின்லாடனே வந்தாலும் வரலாம்.

பின்குறிப்பு: இஸ்லாமிய் சகோதரர் மன்னிப்பாராக.

வெத்து வேட்டு said...

how a muslim will be hurt when we ask question about his or her religion....just like a hindu will be hurt too when his or her religion is questioned...do you understand???
and exactly the same way a DK person feels when we talk about veeramani's romantism with maniyammai.... ;)

RATHNESH said...

இந்துக்கள் அல்லாதவர்களுக்கெல்லாம் ஆயிரம் வேலை இருக்கிறது. நீங்கள் சு.சாமியைப் பற்றிச் சொல்லி இருப்பது போல், இந்துக்களின் மனத்தை அவர்களே புண்படுத்திக் கொண்டு அவர்களே கூப்பாடு போட்டுக் கொண்டால் தான் உண்டு.

ஆமாம் இந்துக்கள் என்பவர்கள் யார்? அதை முதலில் வரையறுத்துச் சொல்லுங்கள்; அவர்கள் மனம் புண்படுவது என்றால் என்ன என்று விளக்கமாகச் சொல்கிறேன்.

TBCD said...

மணம் என்று ஒன்று இருந்தால் தானே அதை புண்படுத்த முடியும்...இந்த கொடுமைக்கார கூட்டத்திற்கு அது இல்லையே...பின் எப்படி புண்படுத்த முடியும்...

பனிமலர் said...

http://panimalar.blogspot.com/2007/10/blog-post_20.html

இதைத்தான் நானும் கேட்டேன், ஒரு நாணயத்திற்கு 2 பக்கம் இருப்பது போல் அல்லது இரு வழக்கிற்கு வாதி பிரதிவாதி என்று இருப்பது போல். ஆனால் ஒருவரும் இது தொடர்பாக கதைக்காமல் இருப்பது பார்க்கும் போது அந்த பதம் அவர்களுக்கு மிகவும் அவசியம் போலும்.

வினு said...

பனிமலர், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இது குறித்த உங்கள் பதிவை நான் முதலிலே படித்து விட்டேன்.

வினு said...

சரியாகச் சொன்னீர்கள் TBCD... ஆமாம் இந்தப் பெயரின் அர்த்தம் என்ன?

வினு said...

கடினமான கேள்வி தான் ரத்னேஷ். முதலில் இங்கு உள்ளவர்களால் யார் இந்து என்பதையே வரையறுக்க முடியாது,

வினு said...

நந்தவனத்து ஆண்டியாரே, கிறிஸ்தவர் மனதை புண்படுத்திவிட்டார்கள், இஸ்லாமியர்கள் மனதை புண்படுத்திவிட்டார்கள் என்று யாராவது சொன்னால் அதற்குரிய காரணங்களையும் ஆராயலாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

TBCD said...

Tamilnadu Born Confused Dravidan

/**வினு said...
சரியாகச் சொன்னீர்கள் TBCD... ஆமாம் இந்தப் பெயரின் அர்த்தம் என்ன?
**/