Saturday, October 20, 2007

சூதாடிச் சித்தர் ஸ்ரீ ஸ்ரீ சரவண விஜய அடிகளாரின் கேள்விகளுக்கு பதில்கள்

சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை. கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதைப் பூஜை செய்தால் கல்வி வரும் வித்தை வரும்---------------------
முதலில் நான் நாத்திகனும் அல்லஆத்திகனும் அல்ல.பெரியார் வழியும் இல்லை.பார்ப்பனர்கள் அடிவருடியும் இல்லை.பெரியார் மேல் தனிப்பட்ட அபிப்ராயம் உண்டு.பகுத்தறிவு பகலவன்,தாழ்ததப்பட்டோர் இட ஓதுக்கீடு,நிறைய சொல்லாம்.
அர்த்தமற்ற விழாக்கள்/விசயங்கள் ஆயிரம் உண்டு. சரஸ்வதி பூஜை அந்த வகையில் சேர்ந்ததா என்று தெரியவில்லை.ஆனால் அதனால்

1.உழைப்பாளிகளுக்கு,பொறி,சுண்டல்,பழம்,பூ போன்ற வியாபரிகளுக்கு நல்ல வரவு.ஓரு நாள் விடுமுறை,மக்கள் கூடுவதறக்கு/பழகுவதற்க்கு இதுஓரு வாய்ப்பு. அதனால் தொழில் பெருகுமே தவிரவளராது.


பதில்: எந்த பண்டிகையைப் பற்றிப் பேசினாலும், கடைசியில் எல்லோரும் முடிப்பது இது தான். "மக்கள் கூட ஒரு வாய்ப்பு, சிறு வியாபாரிகள் பயனடைவார்கள்".....

இதை ஒரு வகையில் ஒத்துக் கொண்டாலும், மேற்கு நாடுகளிலும் நிறைய விழாக்கள் கொண்டாடுவதை பார்த்திருக்கிறேன். ஆனால் இங்கு நடப்பதைப் போல எந்த விழாக்களுக்கும் அடிப்படை காரணம் இல்லாமல் பார்த்ததில்லை. வருடத்தின் கோடை விடுமுறையில் அறிவியல் காட்சியகங்களுக்கு குழந்தைகளைப் கூட்டிப் போய், ஏரோப்பிளேன் எப்படி பறக்கிறது, டீசல் எஞ்சின் எப்படி இயங்குகிறது என்று கற்றுக் கொடுக்கும் பெற்றோர்களைப் பார்த்திருக்கிறேன். அதோடு மட்டுமல்லாமல் அந்த இயந்திரங்களின் Proto Type Toys வாங்கிக் கொடுத்து அதை இயக்க கற்றுக் கொடுக்கும் விதத்தையும் பார்த்திருக்கிறேன். நம்ம இந்தியத் திருநாட்டில் தான், Ford Ikon காரை கழுவி பொட்டு வைத்து, குடும்பமாய் நின்று சாமி (!) கும்பிட்டு, காருக்கு சூடம் காட்டி, பொறி, சுண்டல், பழம் படைக்கும் நல்ல பழக்கம் இருக்கிறது.

ஹன்றி போர்டு இருந்திருந்தால் ஆனந்தக் கண்ணீர் விட்டிருப்பார்... அவர் கூட அந்த காரின் முன்னால் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கி இருக்க மாட்டார்... விவேக் சொன்னது தான் நியாபகத்திற்கு வருது... ஜப்பான்காரன் கஷ்டப்பட்டு லான்சர் காரை கண்டுபிடிச்சா நம்ம ஆள் அதுக்கு முன்னால தேங்கா சுத்தறான்.

பார்க்கும் குழந்தைக்கு என்ன தோன்றும்? பிற்காலத்தில் அதன் அறிவுக் கூர்மை எந்த இடத்தில் இருக்கும்? (ரைட் சகோதரர்கள், போர்டு, எந்த நாட்டில் பிறந்தார்கள் என்றும், மின்னலே விவேக் லாரி காமெடியையும் கொஞ்சம் நினைத்துப் பார்த்துக்
கொள்க.)


2.சரஸ்வதி பூசையின் உள் அர்த்தம் அந்த நாளில் தொழில் தொடங்கினால்நல்லது என்பார்கள். கிராமங்களில் சில நாட்கள் பார்த்துதான் விதை விதைப்பார்கள்.(நானே பார்த்து இருக்கேன்.)ஏன் எல்லா நாளும் விதை விதைக்காதா?அது போல் ஆயுதபூசையும் நல்லநாள் பார்த்துதான்வைப்பார்கள்.! (மற்ற மதவிழாக்களும் இதை ஓட்டியே வரும்.ரம்ஜான்)


பதில்: "பருவத்தே பயிர் செய்" என்பது தமிழன் மொழி. விதை விதைப்பதை கோடை காலத்தில் செய்ய முடியாது. ஆடியில் தான் விதைக்க வேண்டும். இது அறிவு. அதில் ஜோசியம் பார்த்து, ராகு காலத்தைப் தவிர்த்து, சுபமுகூர்த்தத்தில் விதைப்பது முட்டாள்தனம்....

நம்மை விட வேளாண்மையில் சிறந்த நாடுகள் எல்லாம் இப்படி நாள் பார்த்து விதைப்பதில்லையே... அவர்கள் எதை தின்கிறார்கள்?


இன்னும் எளிமையாக செல்வது என்னவென்றால்நீ வீட்டில் பார்க்கும் நல்லநேரத்தை விட்டு வேறநாளில்திருமணம் பண்ணுவாயா? தம்பி இந்த வெட்டி பேச்சுல்லாம்சும்மகாட்சிக்கு...

பதில்: நான் ராகு காலத்தில் திருமணம் செய்தால் நீ கடவுள் நம்பிக்கையை விட்டு விடுகிறாயா? என்று அசட்டுத்தனமாக பதில் சொல்ல மாட்டேன். நான் M.E சேரும் போது ராகு காலத்தில் பீஸ் கட்டி தான் கல்லூரியில் சேர்ந்தேன்.. பல்கலைக்கழக ரேங்க் வாங்கவில்லையா? பணயம் வைத்தது அப்பா காசு :)) நான் இது வரை எனது புத்தகங்களை வைத்து பூஜை செய்ததில்லை என்பதை நினைவில் கொள்க.

எனக்கு மூன்றாம் வகுப்பு நடத்திய ஆசிரியர் ஒருவர் இருக்கிறார். நாத்திகர். அவருடைய திருமணம் முடிந்து பெண்ணை வீட்டுக்கு அழைத்து வரும் போது முருகன் படத்தை கீழே போட்டு உடைத்து இடது காலை முதலில் எடுத்து வைத்து, ராகு காலத்தில் மனைவியை அழைத்து வந்தார். அருமையான இல்லறம். முத்தான ஒரு பையன். என் கூடத் தான் படித்தான். இப்போ பொறியியல் படித்து நல்ல வேலையில் இருக்கிறான். போன வருடம், அவன் திருமணம் சுயமரியாதை முறைப்படி தான் நடந்தது.

சரி இப்போது என் விடயத்துக்கு வருவோம். நான் வாய்ச் சவடால் விட விரும்பவில்லை. எனது திருமணத்திற்கு உனக்கு கட்டாயம் அழைப்பு உண்டு. வந்து பார்.


3.அடிப்படை கடவுள் இருக்கிறார இல்லையா என்பது தான்.சரஸ்வதி,சிவன்,தேவர்கள் போன்றவர்கள் உண்மையில் கிடையாது.வெறும் நம்பிக்கை.கடவுள் என்பது மனிதனின் அடுத்த பரிணாமம்.(இன்னும் அன்பே சிவம் பாணியில் சொல்வதனால் நீ நான் சிவம்)அதனால் தான் கிராமங்களில் சிறப்பாகவாழ்ந்த கருப்பசாமி,முனியசாமியை தெய்வங்களாக கருதி வணங்கி வந்தனர்.
உன்னை என்னை உருவாக்கிய சக்தி(கருவறை) தான் பெண்கடவுள்என்கிறார்கள்.! பெயர் என்பது நியாபகத்து எளிமையாக இருப்பதறக்காக!எடுத்துக்காட்டு 11-படிக்கும் போது 1+1 கற்று தருவார்கள்4படிக்கும் போது கேள்வி எழும் ஏன் 1வகுப்பில 1+1 சொல்லித்தர்றாங்க?10ல sin cos tan சொல்லி தருவாங்க..எ.கா 2அது மாதிரி சின்ன குழந்தைக்கு துணைக்கு பொம்மை கொடுக்கிற மாதிரி தான் பாமரர்களுக்கு கடவுள்/சரஸ்வதி/சிவன் என்கிற உருவம்.(சத்குரு ஜக்கி வாசுதேவ்)நாளடைவில் அந்த உருவத்தை வழிபடாமல் உருவமற்ற சக்தி வழிபாடுதான் உண்மையான கோட்பாடு.


பதில்: ஜக்கி வாசுதேவ் மாதிரியான கார்ப்பரேட் சாமிகள், தேன்ல பால் வடியற மாதிரி தான் பேசறாங்க.

இந்து மதத்தில் எந்தப் பிரிவும் நாங்கள் உருவமற்ற வழிபாட்டை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கிறோம்னு சொல்றாங்களா?

“ஒரு தாரம் தலையில் வைச்சு மறு தாரம் பக்கம் வைச்ச சிவனே சிவனே” என்ற நிலமையில் தான் பெண் கடவுள்களின் நிலை இருக்கிறது.

"உன்னை என்னை உருவாக்கிய சக்தி(கருவறை) தான் பெண்கடவுள் என்கிறார்கள்" என்றால் கையில் வேல் சூலாயுதமும், வைர ஒட்டியாணமும் எதற்கு? இதில் கருவறையில் நீச்ச பாசையில் மந்திரம் சொல்ல மாட்டோம் என்பதும், தலித் எல்லாம், கருப்புசாமியையும், முனிசாமியையும் கும்பிடு என்றும்…… பேசுகிற மொழியிலும், வணங்குகிற கடவுளிலும், அப்பர் க்ளாஸ், மிடில் கிளாஸ், க்ரீமி லேயர் வைத்ததிற்கு என்ன காரணம்? தகரடப்பாவிற்கு தங்கமுலாம் பூசப் பார்க்காதே.

1+1 படிக்காமல் Sin Cos Tan படிக்க முடியாது என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி. இதைத்தான் நாங்கள் "உள்ளது சிறத்தல்" என்று டார்வின் பரிமாண விதிப்படி சொல்கிறோம்.


4.நம்ம மனசு கேள்வி பதில்,எல்லா விசயங்களை விட கதைகள்/படங்கள் தான் எளிதில் பதியும் கனவில் படங்கள் தான் வரும்.அதனால் பல புருடா புராணங்கள் எழுதி வைத்தார்கள்.அதில் எது உண்மை பொய் என்று தெரியாது..இன்னும் பக்தி இலக்கியங்களில் காம/காதல் ரசம் தான் அதிகம்(கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதம்)சரஸ்வதி உற்பவக் கதை சொல்லுகிறது. அதாவது தன் தகப்பனையே மணந்து கொண்டவள் என்று ஆகிறது!


பதில்: ஒத்துக் கொண்டதற்கு நன்றி. நேரம் இருந்தால், மாற்றுக் கருத்தையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருந்தால் கீ.வீரமணி எழுதிய "அர்த்தமற்ற இந்துமதம்" மற்றும் "கீதையின் மறுபக்கம்" படித்துப் பார்க்கவும்.


5.இந்து மதப்படி சரஸ்வதி/கடவுள் சாதரண மேன்மையான மனிதர்கள்.!இதை சொன்ன(பெரியார்),திராவிட கட்சிகளின் மூத்த தலைவர் மகளுக்கு ஓத்த பெண்மணிகளையே கல்யாணம் பண்ணிக்கொண்டார் !காமம்/காதல் இயற்கையானது ! கடவுளும் நம்மளைமாதிரி தான்.அது இடத்தையும்/காலத்தையும் பொறுத்து சரி/தவறு.சரி பெரியார் ஆகட்டும்.திராவிட முன்னேற்ற கழகம்அ.இ.தி.மு.க.இன்னும் திராவிடர் கழகம் ஆகட்டும்அவர்கள் தலைவர் வீட்டில் எத்தனை பேர் உண்மையானதிராவிட கொள்கை கடைபிடிக்கிறார்கள்(10%?).சொல்..ஓரு நல்ல கருத்தை உன்னைச் சுற்றி உள்ளவர்களை மாற்ற முடியாதுஎனில் மற்றவருக்கு சொல்லி/உபதேசித்து என்ன பயன்?நம்ம புடுங்கிற ஆனி எல்லாமே தேவை இல்லாத ஆனிதான்.


பதில்: பெரியார் செய்தது மணமொத்த திருமணம். மணியம்மை விருப்பத்திற்கு வேறாக அவர் திருமணம் செய்யவில்லை. தவிர சிவன், சரஸ்வதியோடு ஒப்பிடுவதற்கு பெரியார் கடவுள் அல்ல.

அர்த்தமுள்ள இந்துமதம் எழுத கண்ணதாசனுக்கு என்ன தகுதி? அதே தகுதிதான் இந்து மதத்தை விமர்சிக்க பெரியாருக்கு உள்ள தகுதி.

காலத்தையும் இடத்தையும் பொறுத்து எல்லாம் சரி தவறு என்றால் எந்த நியாயத்தையும் அநியாயமாக்க முடியும். எந்த அநியாயத்தையும் நியாயமாக்க முடியும்.

திராவிட தலைவரின் துணைவிகளோ, வாரிசுகளோ, உறவினர்களோ இந்தக் கொள்கைகளை கடைபிடிப்பது இல்லை. உண்மை. அதுதான் பகுத்தறிவின் சுதந்திரம்.

இது மதம் போல (எண்ணாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றி கொல்வதைப் போல, குஜராத்தில் நடந்த மதக்கலவரங்களைப் போல, பத்வா விடும் பண்டாரம், பரதேசிகளைப் போல) முரட்டுத்தனமானது அல்ல.

“என்னுடைய சுதந்திரம் உன்னுடைய மூக்கு நுனிவரைதான்” என்பது தான் பகுத்தறிவு அளிக்கும் சுதந்திரம். அது தான் திராவிட இயக்கத்தினரின் குடும்பத்திற்கும் பொருந்தும். தவிர வெறுமனே சத்தி வழிபாடு நடத்தி விட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடிப்பது, தாயை பழிப்பது, விதவையைப் பார்த்தால் விலகி ஓடுவது, தீட்டுப் பட்ட பெண்களை வெளியே குடிவைப்பது என்பது எல்லாம் பக்திமான்களா? நாத்திகர்களா? என்று ஆராய்ந்து பார்.

நல்ல கருத்துக்களையெல்லாம் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், நம்மைச் சுற்றி இருப்பவர்களைக் கூட மாற்ற முடியாது என்று பெரியாரும், அம்பேத்காரும் நினைத்து இருந்தால், மலம் அள்ளிக் கொண்டிருந்தவனும், துணி வெளுத்தவனும், முகச் சவரம் செய்தவனும் நாடாள முடியுமா? இல்ல BC கோட்டாவில நீ பொறியியல் படித்திருக்கத்தான் முடியுமா?


6.வெளிநாட்டில் அர்த்தமற்ற ஆயிரம் விழாக்கள் செலவீனங்கள் உண்டு,(அசிங்கமான படம் எது,எலி ஓட்டப்பந்தயம்) அதனால் அவர்களை இங்கே இழுப்பது நேரவிரயம்.


பதில்: உன்னுடைய உயரத்தை அளக்க வேண்டுமென்றால் கூட பக்கத்தில் இருக்கும் சுவர் தேவைப்படுகிறது. Benchmarking என்பது உலக நடைமுறை. நாம் செய்வது தவறு என்றால் திருத்திக் கொள்வதிலும், மற்றவர்களின் நல்ல பழக்கவழக்கங்களை கடைபிடிப்பதிலும், தவறு இல்லை.

இதைத்தான் பெரியார், "மேலே ஆறு லோகங்களும், கீழே ஒரு லோகமும், முப்பத்து முக்கோடி தேவர்களையும் எண்ணி சொன்ன நமக்கு, எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை வெளிநாட்டுக்காரன் வந்து அளந்து சொல்ல வேண்டியிருக்கிறது" என்றார்.

பக்தி என்பது அறிவை மழுங்கடிக்காமலும், நல்ல கருத்துக்கள் எங்கிருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை தர வேண்டும்.


7.பேப்பர் தொட்டுக் கும்பிடுறது இது எல்லாம் பைத்தியக்காரத்தனம்.

பதில்: நன்றி.


8.வீணான வெட்டி பூசைகள்/சடங்குகள் விட்டு ஆய்தபூசை கொண்டாடலம்.

பதில்: வெட்டி பூஜையை விட்டு விட்டால் ஆயுத பூஜை கிடையாது கண்ணா.

1 comment:

அருண்மொழி said...

சித்தரே,

//முதலில் நான் நாத்திகனும் அல்லஆத்திகனும் அல்ல.பெரியார் வழியும் இல்லை.//

பதில்கள் அப்படி தெரியவில்லையே :-). எல்லாம் அவன் செயல்.