Saturday, October 13, 2007

எது நம்பிக்கை?

ராமன் பிறந்தான் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் அதெல்லாம் ஒன்றுமில்லை. நான் நம்புகிறேன் என்று சொல் லுகின்றார்கள். இந்த நம்புகிறோம் என்பதை ஒத்துக் கொண்டால் நாளைக்கு ஒவ்வொருத்தனும் கிளம்பி வந்துவிடுவார்கள். நேராக கலெக்டர் ஆபிசுக்குப் போய் எங்கள் தாத்தா கனவில் வந்தார். இது எங்கள் தாத்தா சொத்து என்று சொன்னால். அதனாலே கலெக்டரை அங்கிருந்து வெளியேற்றி விட முடியுமா? அதற்கு என்ன ஆதாரம்? என்று கேட்டால் சொல்ல முடியுமா?


நம்பிக்கை என்று இப்படி கேள்வி கேட்டால் உச்சநீதிமன்றத்திலும் உச்சிகுடுமிகள் உட்கார்ந்திருப்பதினாலே அவர்கள் என்ன சொல்லுகின்றார்கள்? நம்பிக்கையை விடக்கூடாது என்று சொல் லுகின்றார்கள். இந்த அறிவியல் காலத்தில் நம்பிக்கையை ஏற்கவேண்டும் என்று சொன்னால் என்ன அர்த்தம்? நாளைக்கு உச்சநீதிமன்றம் இருந்த இடம் எங்களுடைய சொத்து இது, எங்கள் நம்பிக்கை என்று சொன்னால் நீதிபதி வெளியே எழுந்து போய்விடுவாரா? அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்பார் அல்லவா? இல்லிங்க, இது எங்களுடைய நம்பிக்கைங்க. அதனால் நீங்கள் வெளியே வந்துவிடுங்கள். நாங்கள் புதிதாக இங்கு ஒரு கோயில் கட்டப் போகிறோம். நீங்கள் எல்லாம் இங்கே இருக்காதீர்கள் என்று சொன்னால், நீதிபதி சம்மதிப்பாரா?எனவே பக்தி என்பதை வைத்துத்தான் மக்களை ஏமாற்றுகிறார்கள்.


மத நம்பிக்கைகள் எனக் கருதப்பட்ட பலவற்றையும் உடைத்ததாலேயே மனிதர்கள் பல நேரங்களில் காப்பாற்றப்பட்டுள்ளார்கள் என்பது அத்வானிகளுக்குத் தெரியுமா? உதாரணமாக, சதி என்ற உடன்கட்டை ஏறுதல் என்பது ஒரு காலத்தில் இந்து மத நம்பிக்கை தான். அதனைத் தகர்த்ததால் தான் இன்று கைம்பெண்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.


அந்த நம்பிக்கையை இன்றும் காப்பாற்றியிருந்தால், கடந்த கால ஆண்டுகளுக்கு முன்னால் உயிரிழந்த பா.ஜ.க.வின் பிமோத்மகாஜன் மனைவி இன்று உயிரோடு இருந்திருக்க முடியுமா? சதி என்ற உடன் கட்டை ஏறும் இந்து மத நம்பிக்கையை இன்று வலியுறுத்தி இந்துத்துவத்தை தூக்கி நிறுத்தி ஓட்டு கேட்க அத்வானிகள் தயாரா?

No comments: