Saturday, September 15, 2007

பாவம் பிள்ளையார்

படங்களைப் பார்த்த போது வருத்தமாகத் தான் இருந்தது.




இப்படிக் கடலில் கொண்டு போய் போடுவதற்கு எத்தனை அனுமதிகள், போக்குவரத்து நெரிசல்கள், மத மோதல்கள், குடித்து விட்டு பிள்ளையார் முன் குத்தாட்டம் போடுவது இப்படிப் பல பல.




வடக்கத்திய பண்டிகை, இந்த புதுக் கலாச்சாரம் தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது, என்ற ஆரம்ப கால எதிர்ப்புகளை மீறி ரவுடி ராஜ்ஜியத்துடன் பிள்ளையார் ஊர்வலம் நடக்கிறது.





இப்படி அவரை அவமானப்படுத்த வேண்டாம் என்று மற்றவர்கள் சொன்னால் "இந்துக்கள் மனதை புண்படுத்துகிறார்கள்" என்பார்கள்.

பிள்ளையாரை புண்படுத்தாமல் இருந்தால் சரி.



பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

உதயமாகியுள்ள பிள்ளையார் டி.விக்கும் வாழ்த்துக்கள்!

4 comments:

Unknown said...

உங்கள் பதிவு சிறப்பாக இருக்கிறது. பழைய முறைப்படி மண் பிள்ளையாரை பயன்படுத்துவதற்கு என்ன இவர்களுக்கு. இவர்கள் என்ன பிள்ளையார் பண்ண்டிகையையா கொண்டாடுகிறார்கள். சில கட்சிகளை வளர்க்க இப்படி கடற்கரைகளை மாசுபடுத்துகிறார்கள்.

கோவி எனும் கோவிந்து.

வினு said...

கோவி, வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. பிள்ளையார் ஊர்வலத்திற்காக, கேளம்பாக்கத்தில் இருந்து மத்திய கைலாஷ் வரையிலான தொலைவை 5 மணி நேரத்தில் கடந்த அனுபவமே இதை எழுதத் தூண்டியது.

இராசகுமார் said...

"இப்படிக் கடலில் கொண்டு போய் போடுவதற்கு எத்தனை அனுமதிகள், போக்குவரத்து நெரிசல்கள், மத மோதல்கள், குடித்து விட்டு பிள்ளையார் முன் குத்தாட்டம் போடுவது இப்படிப் பல பல."

வினு முக்கியமான பிரச்சனை "சுற்று சூழல்" மாசுபடுவதை விட்டுட்டீங்களே?

அது சரி பிள்ளையார் T.V ஆ? சொல்லவேயில்ல!?

AJOO said...

ayyo pavam pillayar avaroda mama raman B.E(civil)kitta solli irunda nalla udayama senju kuduthu irupparu adam's bridge mathiri(Dont try to burn my house i am in chennai)