Saturday, September 8, 2007

டாக்டர் பட்டமும், திரைப்பட விருதுகளும்

சமீபத்துல தமிழ் நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவித்திருக்கிறார்கள். வழக்கம் போல் எல்லா ஆட்சியிலும் நடப்பது போல இந்த விருதுகள் ஜால்ராவுக்கும், அரசியல் வலையில் இழுப்பதற்கும் பயன்பட்டிருக்கிறது. டாக்டர் பட்டங்களெல்லாம் பிலிம்பேர் அவார்ட் ரேஞ்சில வந்த பிறகு, யாரை குத்தம் சொல்லியும் பயனில்லை.

வாங்குனவங்களை எல்லாம் எதுக்காக வாங்கினார்கள்னு ஆராய்ச்சி பண்றத விட்டுட்டு நாம ஒரு லிஸ்ட் போட்டா என்னன்னு தோணியது.

2005ம் ஆண்டுக்கான விருது பெறும்(!)/ என்னால் தேர்வு செய்யப்பட்ட கலைஞர்கள்:

சிறந்த நடிகர் - ராஜ்கிரண் (தவமாய்த் தவமிருந்து)
சிறந்த நடிகை - லைலா (கண்ட நாள் முதல்)
சிறந்த வில்லன் - ரஜினி காந்த் (சந்திரமுகி)
சிறந்த நகைச்சுவை நடிகர் - வடிவேலு (சச்சின்)
சிறந்த இயக்குநர் - சேரன் (தவமாய்த் தவமிருந்து)

சிறந்த படங்கள் - தவமாய்த் தவமிருந்து
2வது இடம் - கண்ட நாள் முதல்
3வது இடம் - கஜினி

சிறந்த குணச்சித்திர நடிகர் - பிரகாஷ் ராஜ் (அறிந்தும் அறியாமலும்).
சிறந்த இசையமைப்பாளர் - ஹாரிஸ் ஜெயராஜ் (கஜினி, தொட்டி ஜெயா)

2005ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான சிறப்புப் பரிசை பிரசன்னா (கண்ட நாள் முதல்) பெறுகிறார். சிறந்த நடிகைக்கான சிறப்புப் பரிசை அசின் (கஜினி) பெறுகிறார்.

2006ம் ஆண்டுக்கான விருதுகள்:

சிறந்த நடிகர் - கார்த்தி (பருத்தி வீரன்),
பசுபதி (வெயில்)
சிறந்த நடிகை - சங்கீதா (உயிர்), ப்ரியாமணி (பருத்தி வீரன்)
சிறந்த நகைச்சுவை நடிகர் - வடிவேலு (தலை நகரம், இம்சை அரசன் 23ம் புலிகேசி)
சிறந்த இயக்குநர் - வசந்த பாலன் (வெயில்), அமீர் (பருத்தி வீரன்)
சிறந்த படம் - வெயில்
2வது இடம் - பருத்தி வீரன்.
3வது இடம் - புதுப்பேட்டை

சிறந்த குணச்சித்திர நடிகர் - நாசர் (எம்-மகன்)
சிறந்த வில்லன் - ஜீவன் (திருட்டுப் பயலே)
சிறந்த இசையமைப்பாளர் - யுவன் ஷங்கர் ராஜா (புதுப்பேட்டை, பருத்தி வீரன்)

2006ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர்களுக்கான சிறப்புப் பரிசை தனுஷ் (புதுப்பேட்டை), பரத் (எம்டன் மகன்) பெறுகிறார்கள். சிறந்த நடிகைக்கான சிறப்புப் பரிசு சினேகா (புதுப்பேட்டை), பாவனா (சித்திரம் பேசுதடி)ஆகியோருக்கு கிடைத்துள்ளது.

அப்படியே போகும் போது அடுத்து யாருக்கு டாக்டர் பட்டம் தரலாம்னு ஓட்டுப் போட்டுட்டு போங்க.....

6 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

உங்கள் தேர்வுகளுடன் ஒத்துப் போகிறேன்.
ஆனா டாக்டர் பட்டம் மட்டும் நமிதாவுக்கே...கொடுக்க சிபார்சு செய்கிறேன்.
ஏனெனில்..அது தமிழ் நாட்டில் கழிசடைகளுக்குக் கொடுப்பதும் ..கழிசடைகள் வாங்குவதும் தானே(சமீபகாலமாக)

வினு said...

யோகன்... வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. நானும் நமீதாவுக்குத் தான் ஓட்டுப் போட்டிருக்கிறேன் :-)..... உங்கள் வார்த்தைக் கோர்ப்பில் ஒரு சின்ன ஆலோசனை.

//அது தமிழ் நாட்டில் கழிசடைகளுக்குக் கொடுப்பதும் ..கழிசடைகள் வாங்குவதும் தானே//

"அது தமிழ் நாட்டில் கழிசடைகள் கொடுப்பதும் ..கழிசடைகள் வாங்குவதும் தானே" என்று படிக்கவும். நன்றி.

விஜயன் said...

சினிமா உலகில் ஓருத்தனுக்கும் வெட்கம்,மானம் கிடையாதா?

இந்த விழாவை ஓளிபரப்பப் போவது கலைஞர் தொலைக்காட்சி என்பதனால் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து இருக்கக் கூடாது.

ஆண்டி சொல் அம்பலத்துக்கு கேட்குமா?

விஜயன் said...

தசரதன், கிருஷ்ணன் முதலியோர் 6000- மனைவியரோடும் கோபிகா ஸ்திரிகளோடும் வாழ்ந்திருக்கின்றனர். சுப்பிரமணிக்கு கிருஷ்ணனுக்கு இருபுறங்களிலும் இரு மனைவியர் இருக்கிறார்களே. அதைப் போல அம்மனுக்கு பக்கங்களிலும் வைக்க முடியுமா? - பெரியார்

காட்டமான் வார்த்தைகள்
பாஞ்சாலி இல்லையா? குந்தி தேவி இல்லையா?
கதை சொன்ன கேட்கணும்.ஆராயக்கூடாது
ஆணாதிக்க சமுதாயம்,ஆண் தவறினால் தெரியாது.பெண் தவறினால் 10மாசத்தில் தெரியும்.

வினு said...

ஏகபத்தினி விரதன் என்று ராமனை சொல்வார்கள். ஏகபத்தினன் (அப்படி ஒரு சொல் இருகிறதா என்பதே சந்தேகமே!) விரதை என்று சீதையை சொல்ல முடியுமா?

பிள்ளைப் பேறு என்பது பெண்ணுக்கு இயற்கை அளித்த வரம்/சாபம். மனிதன் பெண்ணை இழிவுபடுத்தலாம். கடவுள் இழிவுபடுத்தலாமா?

10வது மாதத்தில் விளைவு தெரியும் என்பது ஆணாதிக்க கருத்து. அதை தடுக்கும் வழிமுறைகள் அந்தக்காலத்திலும் இருந்திருக்கிறது. இப்பவும் இருக்கிறது. அப்படியே வைத்துக் கொண்டாலும், கரு உருவாவதை தடுத்து விட்டால், பெண்களுக்கும் 6000 கணவன்மார்கள் இருக்கலாமா?

இங்கு சொல்ல வரும் கருத்து "ஒழுக்கத்தை பொதுவில் வைப்போம்" என்பதே.

இராசகுமார் said...

தோழர் வினு
உங்கள் திரைப்பட விருதுகள் பெரும்பான்மையான மக்களின் கருத்துடன் ஒத்து போவதாய் உள்ளது

உங்கள் விருதுகளை வழிமொழிகிறேன்