Saturday, September 1, 2007

Incredible India - இந்தியா இன்க்ரிடிபிள்

இந்தியா பழம்பெருமைகள் நிறைந்த நாடு,உலகில் முதன்முதலில் நாகரீகம் தோன்றிய வெகுசில நாடுகளில் ஒன்று,உலகில் முதல் பல்கலைகழகம் கண்ட நாடு,கலாச்சார,பண்பாட்டு பெருமைகள் நிறைந்த நாடு

இன்றைய இந்தியா ஒன்றும் சளைத்ததல்ல,உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு,வளர்ந்து வரும் வல்லரசு நாடு,சாதனைகள் படைக்கும் இந்தியர்கள்,பங்கு சந்தை அபார வளர்ச்சி,பொருளாதார முன்னேற்றம்.மக்கள் mobileல பேசுறாங்க, car லபோறாங்க,pizza சாப்பிடுறாங்க,அடடா என்ன வளர்ச்சி !

அட இருங்க,அவசரப்பட்டு சந்தோஷ பட்டுகாதீங்க இந்தியாவோட இன்னொரு முகத்தையும் காட்டுரேன் அதையும் பாத்துட்டு பொறுமையா சந்தோஷ படலாம்

இன்னொரு முகம்

உலகின் முதன்முதலில் நாகரீகம் தோன்றிய நாட்டில் சகமனிதனை மனிதனாய் மதிக்கும் அடிப்படை நாகரீகம் கூட தொலைந்து போனதேன்?

உண்மையில் வளர்ந்து கொண்டிருக்கிறோமா அல்லது குகை நாகரீகத்திற்கு திரும்பி கொன்டிருக்கிறோமா????

"ஏண்டா இந்தியாவை பத்தி எழுதுறதுக்கு எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கும் போது,ஏதோ அங்க ஒன்னும் இங்க ஒன்னுமா நடக்குற விஷயத்தை ஏண்டா பெருசுபடுத்துற" ன்னு நீங்க கேட்கலாம்

கண்ணாடி இல்லாம அலங்காரம் செய்யமுடியுமா?முடியாது.அதேபோல

உண்மை நிலையை உணராதவரை, ஒப்புகொள்ளாத வரை அதை எப்படி நம்மால் மாற்ற முடியும்?

அதனால நான் என்ன சொல்றேன்னா,சும்மா பழம்பெருமைகளை சொல்லி சந்தோஷ பட்டு காலத்தை களிக்க்காமல்,

தோழர் வினு சொன்ன மாதிரி Hitec city,Tidal park,Electronic city வழியா சமூகத்தை பார்க்காமல்,

உண்மை நிலை அறிவோம்,அது குறித்து கவலை கொள்வோம்

சமுதாய சீர்கேடுகளை அகற்ற நம்மாலான முயற்சிகளை செய்வோம்


"சாதிப் பிரிவுகள் சொல்லி-அதில்

தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.

நீதிப் பிரிவுகள் செய்வார்-அங்கு

நித்தமும் சண்டைகள் செய்வார்

சாதிக் கொடுமைகள் வேண்டாம்;-அன்பு

தன்னில் செழித்திடும் வையம்;

ஆதர வுற்றிங்கு வாழ்வோம்;-தொழில்

ஆயிரம் மாண்புற செய்வோம்

-பாரதியார்

இந்த கவிஞகனின் அரைநூற்றாண்டு ஏக்கத்தை,கொடுமைகுள்ளாகும் மக்களின் அவலங்களை நம் தலைமுறையிலாவது மாற்றுவோம்

3 comments:

இராசகுமார் said...

இந்த பதிவிற்க்கு "Incredible India" என்ற தலைப்பு மிக பொருத்தமாய் இருக்குமென்று நான் நினைக்கிறேன்.அப்போ நீங்க?

வினு said...

இராசகுமார், வருகைக்கும், கன்னிப் பதிவிற்கும் நன்றி. சீமையில் இருந்து தாயகம் திரும்பி விட்டதால் இன்னும் எழுதுவீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துக்கள்.

இராசகுமார் said...

நன்றி வினு,

"சீமையில் இருந்து தாயகம் திரும்பி விட்டதால் இன்னும் எழுதுவீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துக்கள்."

இல்ல வினு,சீமையிலதான் எழுத நேரமும் கிடைக்கும்,வீட்டில் உக்காந்து எழுத வசதியா மடிகணிணியும் கிடைக்கும்

இருந்தாலும் உங்க வாழ்த்து தந்த உத்வேகத்தில் எழுதுவேன்னு நினைக்கிறேன்

மத்தபடி "கீழ்வானத்துக்கு" உலகின் எல்லா பக்கங்களில் இருந்தும் நிறைய வழிப்போக்கர்கள் வாறாங்க போல?

உலக வரைபடமே மறையிர அளவுக்கு ஒரே சிகப்பு புள்ளிகள்தான் தெரியுது!
இது தொடர வாழ்த்துக்கள்!