நம்ம நண்பன் ஒருத்தன், இந்தியா மேல பற்று அதிகம். தெலுங்கு தாய் மொழி, டமில் வளர்ப்பு மொழியானாலும், நான் இந்தியனா இருப்பதினால இந்தி தான் என் தாய் மொழின்னு சொல்லுவான். பள்ளி இறுதி வரை தமிழ் படிக்கவே இல்லை. எனக்கு டமில் படிக்க தெரியாதுன்னு சொல்றதில ஒரு நிமிஷம், வெள்ளைக்காரன மாறுன மாதிரி ஒரு பெருமை. தேசியக் கொடிக்கு முன்னால நின்னு விறைப்பா சல்யூட் அடிப்பது, பாலிவுட் படங்கள் மட்டுமே பார்ப்பது, ஹோட்டல் போனால் அரிசி சாப்பாடை எதொ பாக்க கூடாதத பார்க்கற மாதிரி பார்த்துட்டு, ரெண்டு நான், பன்னீர் மசாலா வாங்கி சாப்பிடுவதுன்னு ஒரு ரியல் 'இந்தி'யனா இருந்தான்.
நான் இது மாதிரி நிறைய பேர பாத்து இருக்கேன். இந்தி படிக்காம எப்பவுமெ "தமிழ், தமிழ்"ன்னு சொல்ற நீங்களெல்லாம் தேசிய விரோதிகள், நாங்க தான் தேசிய வாதிகள்ன்னு சொல்லுவாங்க. இவங்களுடைய இந்திய நம்பிக்கைங்கறது, "இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி, பாலிவுட் தான் நம்து திரையுலகம், டமில் என்பது ப்ராந்திய மொழி, கறுப்பு என்பது தாழ்ந்த நிறம், எனக்கு H1B விசா கிடைச்சா அமெரிக்கா வாழ்க, Reservation is non-sense , திருப்பதி ஏழுமலையான பாக்கறதுக்கு 1 வாரம் Qல நிக்கறதுல தப்பு இல்ல" இந்த மாதிரி விஷயங்கள்ள தான்.
எது தேசியம்? எது தேசம், எது ஒற்றுமை? என்பதில் அடிப்படையான புரிதல் கூட இவங்களுக்கு இல்லை என்பது என்னோட வலுவான நம்பிக்கை. இதற்கும் மேலாக, இவர்கள் எல்லாம், இந்தியா என்ற Brand Value வை நேசிப்பவர்களே தவிர உண்மையான கடைக்கோடி இந்தியனை பற்றியும், இன்னும் மலம் அள்ளிக் கொண்டிருக்கும் சமுதாயத்தையும் பற்றி அக்கறை இல்லாதவர்கள். பிரிட்டிஷ்காரன் இடத்தை நிரப்பிய 'இந்தி'யர்கள். நான் பொதுவாக இவங்களுக்கு பதில் சொல்றதில்லை.
காட்சி 1:
ரெண்டு வாரம் முன்னே "Incredible India"ன்னு CNN ல ஒரு நிகழ்ச்சி. ரெண்டு பேரும் உக்காந்து Lays தின்னுட்டு பாத்துட்டு இருந்தோம். யங் இந்தியான்னு ஹைதராபாத், பெங்களூரு, சென்னையிலிருக்கும் கண்ணாடி கட்டிடங்களையும், தலையில Head Phone மாட்டி "Good Morning Sir, May I help you" ன்னு கேட்டுட்டு இருந்த பொண்ணுங்களையும் காட்டிட்டு இருந்தவன் அப்படியெ கேமராவை திருப்பிட்டு பீகார் போயிட்டான். வெள்ளம், ஈயரிக்கும் மார்க்கெட்டில் மீன் வாங்கும் பெண், வயலில் ஆடை அணியாமல் மாடு ஏறி உழுபவர், ரோட்டில் குத்த வைத்து தம் அடிக்கும் பெருசு, நடு ரோட்டில் ஒன்னுக்கு போகும் பையன்......ஆ..ஆ.ஆ.... அவனுக்கு வந்தது பார் கோபம், சிப்ஸ் எல்லாத்தையும் தூக்கி விசிறிட்டான். இந்தியாவுல எத்தனை நல்ல இடம் எல்லாம் இருக்கு, இவனுக வேணும்னே இந்த மாதிரி இடத்தை காட்டி மானத்தை வாங்கறாங்கன்னான்.
நான் ரொம்ப அமைதியாக அவனுடைய "தேச பக்தர்" ரஜினி சொல்ற மாதிரி Cool, Relax!ன்னேன். இது தானே உண்மை, இதை வெளியில சொல்றதில என்ன வெட்கம்னேன். இதை பாத்துட்டு தான் வெளிநாட்ல எல்லாம் எவனுமே இந்தியாவை மதிக்க மாட்டேங்கிறான் அப்படின்னான். There is more Room at the top.... விளம்பரம்.. Qatar Airways..!
காட்சி 2:
ஒரு வார இறுதி. வீட்ல மொக்கை போட்டுதுன்னு ஊர் சுத்தக் கிளம்பினோம். போனது ஒரு சிட்டி. Antwerb - வைர நகரம், வைரம் பட்டை தீட்டுவதற்கு பெயர் பெற்ற ஊர். துறைமுகம் வேற. கேட்கவா வேணும்?, பிரமிப்பா இருந்தது. Belgiumல ரெண்டு ஏரியா. ஒன்னு நான் இருக்கற Wallonia -French பேசும் இடம். அடுத்தது Flanders - Dutch ஏரியா. எங்க திரும்பினாலும் Dutch பெயர்ப் பலகைகள். மருந்துக்கு ஒருத்தன் கூட ப்ரெஞ்ச் பேசலை. நமக்கு தமிழ தவிர எல்லா மொழியுமெ "ஏக் கெளமெ ஏக் கிசான் ரெகதா தா" தான். அதுனால எனக்கு ஒரு வித்தியாசமும் தெரியல.
Tourism Office போய் எனக்கு தெரிஞ்ச ப்ரெஞ்ச்-ல "பாஞ்சூர், மிஸ்தியுர்.." ன்னு ஆரம்பிக்கறதுக்குள்லே, "ப்ரெஞ்சா.....! எனக்கு வாமிட் வாமிட்டா வருது" ன்னு உள்ள ஓடிட்டான். 10 நிமிசம் கழிச்சு ஒரு பட்லர் இங்லீக்ஷ் பையன் வந்து வழி சொன்னான். நம்ம நண்பன் வெறிச்சுப் பாத்துட்டே கூட வந்தான். சரி எதாவது சாப்பிடுவோமேன்னு வழியில இருக்கற ஒரு Cafeக்குள்ள நுழைஞ்சோம். நம்ம பீட்டர், ஒரு பீர், ப்ரெஞ்ச் நூடுல்ஸ் ஆர்டர் பண்ணினான். நான் ஒரு டுரம், ஜினி ஆர்டர் பண்ணினேன். அவன் மேலயும் கீழயும் பாத்துட்டு நம்ம உஸ் பாலாஜி மாதிரி "அய்யூப்பா"ன்ட்டு போயிட்டான். அரை குறை ட்ரெஸ் போட்ட ஒரு பொண்ணு ஓடி வந்து "இங்க ப்ரெஞ்ச் ரெசிபி கிடைக்காது, because its Flanders" ன்னு சொல்லிச்சு.
வேற வழி....."வாலா மெர்சி" ன்னு சொல்லிட்டு வெளிய வந்தோம். "திக்கற்ற NRIக்கு Pizza Hut ஏ துணை!". திரும்பி வரும் போது என் வீட்டுக்கும் Antwerbக்கும் தொலைவு பாத்தேன். 110 KM. :)) More smiles per hour....!
காட்சி 3:
Brugge - Venice of Belgium......அப்படியே நதிக்கரை ஒரமா உக்காந்து "கறுப்பான கையாலெ என்ன புடிச்சான்" WalkMan ல கேட்டுட்டு இருந்தேன்.
(தொடரும்)
4 comments:
தோழர் வினு,
உங்க நண்பன் மாதிரியே நிறைய பேர் கிளம்பியிருக்காய்ங்க.நான் கருப்புன்னு சொல்லிக்க வெக்கப்பட்றது,தாய்மொழியை படிக்காம விட்டுட்டு "எனக்கு டமில் படிக்க தெரியாது "ன்னு சொல்லிக்கிறதுல பெருமைபட்றது,தன்மானமுள்ள் யாரவது தமிழ் பற்றோட,தமிழன் என்கிற பெருமிதத்தோடு இருந்தா, ஏதோ வேற்று கிரக ஜந்துவை பாக்கிற மதிரி பாக்கிறதுன்னு.
தன் மொழியை, தன் பண்பாட்டினை மதிக்காத சமூகம் தன் மானமில்லா மனிதனுக்கு சமம்.இரண்டுமே மேன்மையடயபோவதில்லை
தமிழின எழுச்சிக்கு தடைகற்களாய் நிற்கும் உங்கள் நண்பன் போன்றோர் படிகற்களாய் செதுக்கப்பட வேண்டியவர்களே......
தாய்மொழியில் பேசுவது அநாகரிகம்,நம்மை அடிமையாக்கியவனின் மொழியில் பேசுவது நாகரிகம் என்று தமிழன் தன்மானமற்று போனது குறித்து கவலைப்படு என் தோழா...
தமிழும்,தமிழ் பண்பாடும்,அதன் பெருமையும் கேலி கூத்தாய்,வியாபார பொருளாய் ஆக்கபடுவது குறித்து கோபப்படு என் தோழா...
ராஜ், வருகைக்கும், பதிவுக்கும் நன்றி.
//தன் மொழியை, தன் பண்பாட்டினை மதிக்காத சமூகம் தன் மானமில்லா மனிதனுக்கு சமம்.இரண்டுமே மேன்மையடயபோவதில்லை//
உண்மை. இன்றைய சூழ்நிலையில் மானம் என்பது மறத்துப் போன சமுதாயம் தான் தமிழ் சமுதாயம். ஆனால் நிலை மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
"ப்ரெஞ்ச் ரெசிபி " அப்படி என்ன பிரச்சன்னை.french foodla.
சிக்கன்ல பாதி வேகாம, ஒரு கண்ண தொறந்து உன்னையே பாத்துட்டு இருக்கும்.
Post a Comment