எழுத்தாளர் சுஜாதாவின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
இந்த நிமிடம் வரை அவரது நிறைய எழுத்துக்களோடு எனக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும், அவருடைய தமிழ் நடை எனை ஆட் கொண்டது.
ஒரு விமர்சகனாய் அவரது எழுத்துக்கள் திருவரங்கத்திலும், மயிலாப்பூரிலும் வந்து முடிவதாய் எனக்குப் பட்டாலும், அதுவும் ஒரு பால்ய கால வாழ்க்கையின் பாதிப்பாய் மட்டுமே தோன்றுகிறது.
இவருக்குப் பின்னால் இந்த பரந்து விரிந்த அறிவியல் தளத்தில் எழுத யார் உள்ளார்கள்?
நான் முதலில் படித்த நாவலே அவர் எழுதிய "வாய்மையே சில சமயம் வெல்லும்" தான்.
ஆறாம் வகுப்பு படிக்கும் போது ஆவலாய்ப் பார்த்த "என் இனிய இயந்திரா", மற்றும் அப்போது அடிக்கடி நான் விளையாட்டாய் அடிக்கடி சொல்லும் "வாழ்க ஜீவா"வும் நினைவுக்கு வந்து செல்கிறது.
பிறகு அவர் கற்றதும் பெற்றதும், முதல்வன் தொடங்கி சிவாஜி வரை எழுதிய சில வசனங்களில் (அங்கவை சங்கவை வரை)எனக்கு ஒப்புமை இல்லாவிட்டாலும், அவர் மீது இருந்த மரியாதை குறையவில்லை.
சுஜாதாவை இழந்து வாடும் அவரது எழுத்து உலக ரசிகர்களுக்கும், குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
3 comments:
செய்தி கேட்டு மனம் கலங்கிப்போயிருக்கு. ரொம்பக் கஷ்டப்படாமல் போனாரா? முதுமைன்றதை யாருமே தடுக்க முடியாது. எழுத்தாளனுக்கு 'மரணம்' ஏது? அவருடைய எழுத்துக்கள் நிலைச்சு நின்னு அவரைப்பற்றிச் சொல்லும்.
அவருடைய ஆன்மா சாந்தி பெறணுமுன்னு பிராத்திக்கிறேன். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவருடைய வாசகர்களுக்கும்
மனமார்ந்த ஆழ்ந்த அனுதாபங்கள்
ஆழ்ந்த வருத்தங்களும், அஞ்சலியும்
அறிவியல் கதைகள் என்று இலக்கியத்தில் புதுமை புகுத்தினார் என்பது மறுக்கமுடியாது
அதையும் மிஞ்சி எனக்கும் அவர் எழுதிய ஸ்ரீரங்கம்,கர்நாடக சங்கிதம்,குடுமி இத்யாதிதான் நியாபகத்திற்கு வருகிறது.
Post a Comment