Thursday, September 27, 2007

விவசாயிகளின் கடன்,பட்டினிச் சாவு சாய்நாத்.

பாலகும்மி சாய்நாத் Everybody Loves a Good Drought - Stories form India’s Poorest Districts
நண்பர் அனுப்பிய வலைத்தளத்தில் இருந்து இந்திய விவசாயிகளின் பட்டினிச்/கடன் சாவு பற்றி நம் அரசியல்வாதிகள் சிந்திப்பது இல்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
http://icarusprakash.wordpress.com/2007/09/26/a-stinking-place-called-india/அதிலில் இருந்து சில பகுதிகள்.
“The Farm Crisis: Why have more than a lakh farmers ended their lives in India during the past decade” என்ற பொருளிலே, தி ஹிந்து நாளிதழின் ரூரல் எடிட்டரும், இந்த ஆண்டின் ( 2007 ) ரமோன் மக்சேசே விருது பெற்றவருமான பாலகும்மி சாய்நாத் பாராளுமன்றத்தில் ஒரு சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சி, நேற்று இரவு 12 மணிக்கு , லோக்சபா டிவியிலே ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை அன்று பகல் 12 மணிக்கு மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது
வறுமைத் தற்கொலைகள் அதிகமாகி, ஊடகங்களில் பரவலாகச் செய்தி வந்ததும், அந்த இடங்களுக்குச் சென்று பார்வையிடச் செல்ல, பிரதமர் எடுத்துக் கொண்ட காலம், இரண்டு மாதங்கள். அதே சமயம் பங்கு மார்கெட்டில் பிரச்சனை என்றதும் , நிலைமையைச் சீர் செய்ய அங்கே செல்ல நிதி அமைச்சர் எடுத்துக் கொண்ட நேரம், வெறும் அரை மணி நேரம். இந்திய ஜனத்தொகையில் , பங்குமார்க்கெட்டில் ஈடுபட்டிருக்கும் மக்களின் சதவீதம் 1.8 %. விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களின் சதவீதம், 40 சதவீதத்துக்கும் மேலே.


விவசாயிகளின் தற்கொலைகள் பற்றி சாய்நாத் எழுதி வந்த கட்டுரைகளை இங்கே படிக்கலாம். http://www.indiatogether.org/agriculture/suicides.htm


இந்த கருத்துக்களையும் உள்ளடக்கி, சாய்நாத், இந்திய சமூக விஞ்ஞானக் கழகம் ( சென்னை ) நடத்திய நிகழ்ச்சியில், When rising inequalities threaten democracy என்ற பொருளில் , சென்றவாரம் ஒரு உரை நிகழ்த்தினார். உரை, ஒலி வடிவத்தில் இங்கே கிடைக்கும். 46 எம்பி சொச்சம் இருக்கும் கோப்பை இறக்கிக் கேட்பது சிரமம் தான். இருந்தாலும் கேளுங்கள்.http://www.archive.org/download/BadriSeshadriP.Sainathon_India_WhenrisinginequalitiesthreatenDemocracy_/2007_09_19_Sainath.mp3


பெங்களுர் சுற்றியுள்ள கிராமத்தில் இரண்டு தடவை பயணித்திருக்கிறேன்.அதில் நான் நேரடியாகப் பார்த்தது.பெங்களுரில் பக்கத்தில் இப்படி என்றால் மற்ற கர்னாடக கிராமங்களை பற்றி என்னால் நினைத்து கூடப் பார்க்க முடியவில்லை.
1.ஓரு தடவை அலுவகத்தில் இருந்து புத்தகம் தருவதற்காக சுமார் 20மைல் தொலைவில் உள்ள 5பள்ளிக்குச் சென்று இருந்தோம்.அங்கு படிக்கும் மாணவர்களில் 70சதவிதத்திற்கும் மேல் 11,12 படிக்க மாட்டார்கள்.மதிய உணவு(ISKON) மற்றும் இலவசமாக நோட்புக் கொடுப்பதனால் தான் படிக்கவே வருகிறார்களாம். :-( .

2.40மைல் தொலைவில் இருந்த ஓரு அரசு பள்ளிக்கு படிக்கும் மாணவர்கள் பிச்சை எடுத்து படிப்பதாக கேள்விப்பட்டேன்.அவர்கள் தாயாரே பிச்சை எடுக்க அனுப்புகிறார்கள்

இரண்டு பகுதிகளும் விவசாயம் நம்பிவாழும் கிராமங்கள்.
கோடிகளில் புரளும் அரசியல்வாதிகளுக்குதெருக்கோடியில் வாழ்பவர்கள்தேர்தல் வரும்போது மட்டும்தான் தெரிவார்கள் ! !

Saturday, September 15, 2007

பாவம் பிள்ளையார்

படங்களைப் பார்த்த போது வருத்தமாகத் தான் இருந்தது.




இப்படிக் கடலில் கொண்டு போய் போடுவதற்கு எத்தனை அனுமதிகள், போக்குவரத்து நெரிசல்கள், மத மோதல்கள், குடித்து விட்டு பிள்ளையார் முன் குத்தாட்டம் போடுவது இப்படிப் பல பல.




வடக்கத்திய பண்டிகை, இந்த புதுக் கலாச்சாரம் தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது, என்ற ஆரம்ப கால எதிர்ப்புகளை மீறி ரவுடி ராஜ்ஜியத்துடன் பிள்ளையார் ஊர்வலம் நடக்கிறது.





இப்படி அவரை அவமானப்படுத்த வேண்டாம் என்று மற்றவர்கள் சொன்னால் "இந்துக்கள் மனதை புண்படுத்துகிறார்கள்" என்பார்கள்.

பிள்ளையாரை புண்படுத்தாமல் இருந்தால் சரி.



பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

உதயமாகியுள்ள பிள்ளையார் டி.விக்கும் வாழ்த்துக்கள்!

Tuesday, September 11, 2007

இரவுகள் உடையும் - ஜெயலலிதாவிடம் ஒரு கேள்வி

"குரங்குக்கு வாக்கப்பட்டா மரத்துக்கு மரம் தாவத்தான் வேண்டும்" - கடந்த 5 ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் நிலையும் அதே தான்.

கருணாநிதி சொன்ன மாதிரி "கொஞ்சம் அதிகமான நேரத்துல" (கோபம் தான்) யாரோ போட்டுக் கொடுத்ததன் விளைவாக, அனைத்து சாலைப் பணியாளர்களையும், எதோ போயஸ் கார்டன் எடுபிடிகள் என்று நினைத்து ஒரே உத்தரவின் மூலம் தெருவில் நிறுத்தினார் ஜெயலலிதா.

கல்யாணம் ஆனவர், ஆகாதவர், குழந்தை குட்டிக்காரர், கூட்டுக் குடும்பக்காரர் என பலதரப்பட்ட சாதாரண மக்களின் அடுத்த வேளை சோற்றை கேள்விக் குறியாக்கியது இந்த கையெழுத்து.

பிச்சை எடுக்கும் போராட்டம், அரைநிர்வாணப் போராட்டம், ஒப்பாரி வைக்கும் போராட்டம், என விதவிதமான போராட்டம் நடத்தியும், எல்லாம் "தாயுள்ளம் கொண்ட அம்மா" மனதை கொஞ்சம் கூட கரைக்கவில்லை. மாறாக உச்ச நீதிமன்றம் வரை சென்று ஏழைத் தொழிலாளர்களுக்கு எதிராக வாதிடும் வெறியை மட்டும் கொடுத்தது.

எல்லாம் கருணாநிதி காலி செய்துவிட்டுப் போன கஜானாவை நிரப்புவதற்காக என்று ஜெயா டிவி சொன்னாலும், உண்மையான காரணம் "உண்ணிகிருஷ்ண பணிக்கருக்கே பிரசன்னம்".

ஆண்டுகள் உருண்டோடி அடுத்த குரங்கை தேர்ந்தெடுக்கும் அதிஷ்டமான வாய்ப்பு தமிழ் நாட்டு மக்களுக்கு வரும் முன்பு 75 உயிர்கள் பறி போய்விட்டன. கஜானாவை நிரப்பிய அம்மாவும் "நிதானத்திற்கு" வந்து மறுபடியும் வேலை கொடுத்துவிட்டார்.

இப்போது அந்த 75 குடும்பங்களின் நிலை.................?

நீங்களும், நானும் யோசிக்கவில்லை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் யோசித்திருக்கிறது. அதன் விளைவே இந்த ஆவணப்படம்.


சுமார் 45 நிமிடம் ஓடக்கூடிய இந்தப் படம் ஆரம்பத்தில் ஏதோ சன் செய்திகள் சிறப்புப் பார்வை மாதிரி இருந்தாலும், அடுத்த 10 நிமிடங்களில் இருக்கையில் நிலை கொள்ளச் செய்கிறது.

கடைசி காட்சியில் "அப்பா எங்கே?" என்று அந்த அப்பாவிச் சிறுமியிடம் கேட்கும் போது அந்தக் கண்கள் ஆயிரம் கேள்வி கேட்டு விட்டு, பதில் தெரியாத மழலையாய் கீழே குனிகிறது.

ஜெயலலிதாவிடம் ஒரே கேள்வி. "இதைக் கொண்டு நீங்கள் என்ன சாதித்தீர்கள்?"

ஆவணப்படத்தை பகிர்ந்து கொண்ட
கீற்று இணையதளத்திற்கும், அறிமுகம் செய்த நண்பர் இராசகுமாருக்கும் நன்றி!

Saturday, September 8, 2007

டாக்டர் பட்டமும், திரைப்பட விருதுகளும்

சமீபத்துல தமிழ் நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவித்திருக்கிறார்கள். வழக்கம் போல் எல்லா ஆட்சியிலும் நடப்பது போல இந்த விருதுகள் ஜால்ராவுக்கும், அரசியல் வலையில் இழுப்பதற்கும் பயன்பட்டிருக்கிறது. டாக்டர் பட்டங்களெல்லாம் பிலிம்பேர் அவார்ட் ரேஞ்சில வந்த பிறகு, யாரை குத்தம் சொல்லியும் பயனில்லை.

வாங்குனவங்களை எல்லாம் எதுக்காக வாங்கினார்கள்னு ஆராய்ச்சி பண்றத விட்டுட்டு நாம ஒரு லிஸ்ட் போட்டா என்னன்னு தோணியது.

2005ம் ஆண்டுக்கான விருது பெறும்(!)/ என்னால் தேர்வு செய்யப்பட்ட கலைஞர்கள்:

சிறந்த நடிகர் - ராஜ்கிரண் (தவமாய்த் தவமிருந்து)
சிறந்த நடிகை - லைலா (கண்ட நாள் முதல்)
சிறந்த வில்லன் - ரஜினி காந்த் (சந்திரமுகி)
சிறந்த நகைச்சுவை நடிகர் - வடிவேலு (சச்சின்)
சிறந்த இயக்குநர் - சேரன் (தவமாய்த் தவமிருந்து)

சிறந்த படங்கள் - தவமாய்த் தவமிருந்து
2வது இடம் - கண்ட நாள் முதல்
3வது இடம் - கஜினி

சிறந்த குணச்சித்திர நடிகர் - பிரகாஷ் ராஜ் (அறிந்தும் அறியாமலும்).
சிறந்த இசையமைப்பாளர் - ஹாரிஸ் ஜெயராஜ் (கஜினி, தொட்டி ஜெயா)

2005ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான சிறப்புப் பரிசை பிரசன்னா (கண்ட நாள் முதல்) பெறுகிறார். சிறந்த நடிகைக்கான சிறப்புப் பரிசை அசின் (கஜினி) பெறுகிறார்.

2006ம் ஆண்டுக்கான விருதுகள்:

சிறந்த நடிகர் - கார்த்தி (பருத்தி வீரன்),
பசுபதி (வெயில்)
சிறந்த நடிகை - சங்கீதா (உயிர்), ப்ரியாமணி (பருத்தி வீரன்)
சிறந்த நகைச்சுவை நடிகர் - வடிவேலு (தலை நகரம், இம்சை அரசன் 23ம் புலிகேசி)
சிறந்த இயக்குநர் - வசந்த பாலன் (வெயில்), அமீர் (பருத்தி வீரன்)
சிறந்த படம் - வெயில்
2வது இடம் - பருத்தி வீரன்.
3வது இடம் - புதுப்பேட்டை

சிறந்த குணச்சித்திர நடிகர் - நாசர் (எம்-மகன்)
சிறந்த வில்லன் - ஜீவன் (திருட்டுப் பயலே)
சிறந்த இசையமைப்பாளர் - யுவன் ஷங்கர் ராஜா (புதுப்பேட்டை, பருத்தி வீரன்)

2006ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர்களுக்கான சிறப்புப் பரிசை தனுஷ் (புதுப்பேட்டை), பரத் (எம்டன் மகன்) பெறுகிறார்கள். சிறந்த நடிகைக்கான சிறப்புப் பரிசு சினேகா (புதுப்பேட்டை), பாவனா (சித்திரம் பேசுதடி)ஆகியோருக்கு கிடைத்துள்ளது.

அப்படியே போகும் போது அடுத்து யாருக்கு டாக்டர் பட்டம் தரலாம்னு ஓட்டுப் போட்டுட்டு போங்க.....

Wednesday, September 5, 2007

ராமு

2100 வருடம்.
உங்களுக்கு இந்த நூற்றாண்டு பற்றி தெரிய வாய்ப்பு இல்லை.ஸ்டேம் செல் முன்னேற்றத்தால் ஓரு வாரத்தில் 10கோடி ரூபாயில் நாம் விரும்பும் முழுவளர்ச்சி பெற்ற மனிதனை உருவாக்க முடியும். மேலும் digital செய்திகளை(DVD(10gb),DxD(100gb)) அப்படியே மூளையில் பதிவு செய்து ஞாபக சக்தியுடன் கூடிய புதிய மனிதனைத்(ரோபோ இல்லை, clone) தரமுடியும்.அவனை 100நாட்கள் ஓரு முறை பரிசோதித்து, சரிசெய்து அனுப்ப 1கோடி மட்டும்செலவு ஆகும். இப்பொழுது 2100 வருடம் செல்வோம்.

மருத்துவமனையில் இருந்து ஓரு ஓலக்குரல்மற்ற வியாதியஸ்ர்களைத் திடுக்கிட வைத்தது.
"என் பையன் ராமுவுக்கு என்ன ஆச்சு." கேட்டு மயக்கமடைந்தாள் கயல்விழி.
20நிமிசத்துக்கு முன்னர் போயிங் விமானம் திக்கு தெரியாமல் மலைமீது மோதி அதில் பயணித்த ராமு இறந்தது அவளுக்கு தெரியவாய்ப்பு இல்லை.
"கயல்விழி, கவலைப்படாத , ராமுவுக்கு வெறும் காயம் தான் உயிரோடுதான் இருக்கான்" சமதானப்படுத்தினார் ராமுவின் அப்பா ராஜா.


ராஜா அவசரமாக ராமு பிறந்தது முதல் 17வயது ஆகும்வரை பயன்படுத்தியது,படங்கள் நிழற்படம்,பேச்சுக்குரல்,எல்லாவற்றையும் DxD(100gb)ல் பதிவு செய்தார்.அதை அப்படியே www.newclone.comக்கு அனுப்பி வைத்தார்.
தமிழ்நாடு மரபணு ஆராய்ச்சி மையத் தலைவர் அரவிந்தனை நேரில் சந்தித்தார்.
ஓரு வாரத்தில் என் பையன் மாதிரி ஒரு clone வேணும்.10 கோடி பணம் அரசாங்கத்திடம் இருந்து வாங்கிய clone உரிமைப்பத்திரம்,என் மகனின் சகலசெய்திகளையும் DxDல் உங்களுக்கு அனுப்பிவிட்டேன்.DNA வங்கியில் இருந்துஎன் மனைவி மற்றும்,என் DNA code எடுக்க அனுமதி அளித்து இருக்கேன் என்றார்.


10 நாளில் ராமுவைப் போலவே உருவாக்கப் பட்ட புதிய clone வந்தான்.
மருத்தவமனையில் இருந்த கயல்விழி ஓடோடி வந்து மகனை கட்டிப்பிடித்து கண்ணீர் மல்கினாள்.

"வந்துட்டியாட.flight வெடிச்சதுப் பார்த்து எனக்கு உயிரே போச்சு.இப்ப உன்ன பார்த்ததுக்கு அப்புறம் தான் நிம்மதியா இருக்கு."
"சின்னக் காயம் தான்மா.உயிர் பிழைச்சுட்டேன்." clone கூறியது.நீங்க கவலைப்படதீங்க.

நாட்கள் கடந்தன.
கயல்விழி சகஜ நிலைமைக்கு திரும்பினாள்.clone தனது உண்மையான ராமு இல்லை என்பதை நண்பர்கள் மூலம் உணர்ந்தாள்.அழுதாள் கயல்விழி ,

"இப்ப என்னால இந்த cloneஐ நம்ம பையனா ஏத்துக்க முடியாதுங்க!
100நாட்களுக்கு ஓரு முறை அவனுக்கு 1கோடி செலவு செய்ய வேணுமாங்க? "
அவனை கருணைக்கொலை செய்யலாமா? நமக்கு உரிமை இருக்கா?

அப்பொழுது வந்த clone இதைக் கேட்டு வெட்கித்தலைகுனிந்தான்.

தான் ஓரு இயந்திரம் போல் நினைவுகளை உள் அடங்கியவன் எனவும்
தனக்கு என்று ஓர் அடையாளம் கிடையாது என உணர்ந்தான்.
அவர்களுக்கு சங்கடம் கொடுக்காமல் தற்கொலை செய்ய அவன் முடிவு செய்தான்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------
நான் நினைத்த முடிவினை நிரப்புங்கள் பார்க்கலாம்


Saturday, September 1, 2007

Incredible India - இந்தியா இன்க்ரிடிபிள்

இந்தியா பழம்பெருமைகள் நிறைந்த நாடு,உலகில் முதன்முதலில் நாகரீகம் தோன்றிய வெகுசில நாடுகளில் ஒன்று,உலகில் முதல் பல்கலைகழகம் கண்ட நாடு,கலாச்சார,பண்பாட்டு பெருமைகள் நிறைந்த நாடு

இன்றைய இந்தியா ஒன்றும் சளைத்ததல்ல,உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு,வளர்ந்து வரும் வல்லரசு நாடு,சாதனைகள் படைக்கும் இந்தியர்கள்,பங்கு சந்தை அபார வளர்ச்சி,பொருளாதார முன்னேற்றம்.மக்கள் mobileல பேசுறாங்க, car லபோறாங்க,pizza சாப்பிடுறாங்க,அடடா என்ன வளர்ச்சி !

அட இருங்க,அவசரப்பட்டு சந்தோஷ பட்டுகாதீங்க இந்தியாவோட இன்னொரு முகத்தையும் காட்டுரேன் அதையும் பாத்துட்டு பொறுமையா சந்தோஷ படலாம்

இன்னொரு முகம்

உலகின் முதன்முதலில் நாகரீகம் தோன்றிய நாட்டில் சகமனிதனை மனிதனாய் மதிக்கும் அடிப்படை நாகரீகம் கூட தொலைந்து போனதேன்?

உண்மையில் வளர்ந்து கொண்டிருக்கிறோமா அல்லது குகை நாகரீகத்திற்கு திரும்பி கொன்டிருக்கிறோமா????

"ஏண்டா இந்தியாவை பத்தி எழுதுறதுக்கு எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கும் போது,ஏதோ அங்க ஒன்னும் இங்க ஒன்னுமா நடக்குற விஷயத்தை ஏண்டா பெருசுபடுத்துற" ன்னு நீங்க கேட்கலாம்

கண்ணாடி இல்லாம அலங்காரம் செய்யமுடியுமா?முடியாது.அதேபோல

உண்மை நிலையை உணராதவரை, ஒப்புகொள்ளாத வரை அதை எப்படி நம்மால் மாற்ற முடியும்?

அதனால நான் என்ன சொல்றேன்னா,சும்மா பழம்பெருமைகளை சொல்லி சந்தோஷ பட்டு காலத்தை களிக்க்காமல்,

தோழர் வினு சொன்ன மாதிரி Hitec city,Tidal park,Electronic city வழியா சமூகத்தை பார்க்காமல்,

உண்மை நிலை அறிவோம்,அது குறித்து கவலை கொள்வோம்

சமுதாய சீர்கேடுகளை அகற்ற நம்மாலான முயற்சிகளை செய்வோம்


"சாதிப் பிரிவுகள் சொல்லி-அதில்

தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.

நீதிப் பிரிவுகள் செய்வார்-அங்கு

நித்தமும் சண்டைகள் செய்வார்

சாதிக் கொடுமைகள் வேண்டாம்;-அன்பு

தன்னில் செழித்திடும் வையம்;

ஆதர வுற்றிங்கு வாழ்வோம்;-தொழில்

ஆயிரம் மாண்புற செய்வோம்

-பாரதியார்

இந்த கவிஞகனின் அரைநூற்றாண்டு ஏக்கத்தை,கொடுமைகுள்ளாகும் மக்களின் அவலங்களை நம் தலைமுறையிலாவது மாற்றுவோம்