எனக்கு பிடித்த சில குட்டி கதைகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் ஒரு முயற்சியே இந்த பதிவு.
முதலில்,ஒரு வார இதழில் படித்த, கடவுள் நம்பிக்கை பற்றிய எனது எண்ணத்தையே மாற்றிய ஒரு கதையுடன் தொடங்குகிறேன்
"உண்மையாவே கடவுள் இருக்கிறாரப்பா? "அப்பாவிடம் கேட்டான் பையன்
"இந்த கேள்விக்கு பதில் நாளைக்கு சொல்றேன்ப்பா",என்றார் அப்பா
மறுநாள் பையனுக்கு சைக்கிள் ஓட்ட கத்து கொடுத்துக்கொண்டிருந்தார் அப்பா
பையன் சைக்கிள் ஓட்ட,பிடித்துகொண்டு பின்னாலேயே ஓடி வந்தார் அப்பா.
கொஞ்ச தூரம் போனதும் கையை விட்டுவிட்டு பிடிக்கிற பாவனை செய்துகொண்டே பின்னால் ஓடி வந்தார்
வீடு திரும்பும்போது அப்பா சொன்னார்,"பாத்தியாப்பா இன்னைக்கு நீ சைக்கிள் ஓட்டும் போது கொஞ்ச தூராம்தான் நான் பிடிச்சுகிட்டே வந்தேன்,அதுக்கப்புறம் சும்மா தான் ஓடி வந்தேன்.ஆனா நான் பிடிச்சிருக்கிறேன்ற நம்பிக்கைல நீ சைக்கிள் ஓட்ன பாத்தியா?,அதுமாதிரிதாம்ப்பா கடவுள் நம்பிக்கையும்".
"கடவுள் இருக்கிறாரா, இல்லையான்னு எனக்கும் தெரியாது,ஆனா மனுசன் வாழ்க்கையைல வர்ற கஷ்டங்களை,தடங்கல்களை நம்பிக்கையோட எதிர் கொள்ள கடவுள் நம்பிக்கை தேவைப்படுது.புரிஞ்சதா?"
பையன் கேட்டான் "ஆனா நானே தனியா சைக்கிள் ஓட்ட பழகுனதுக்கப்புறம் நீங்க சும்மா என் கூட ஓடி வர தேவையே இல்லையேப்பா?
பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து நின்றார் அப்பா.
இந்த கதை என்னை மிகவும் பாதிக்க காரணம்,இதை படிக்கும் போது அந்த அப்பாவின் மனநிலைதான் எனக்கும்.அந்த பையன் அப்பாவிடம் கேட்ட கேள்வி என்னிடம் கேட்ட மாதிரி இருந்தது
Sunday, November 11, 2007
கடவுள் இருக்கிறாரா?-சிறுகதை
எழுதியவர் இராசகுமார் நேரம் 4:57 AM
வகை: கதைசொல்லி...
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நன்றாக இருக்கிறது !
the same i told.we need statue worship.Recently i read periyar maniammai story.(kumudham)
Periyar tried to change his wife many times.His wife is Atheist.
Periyar said to somebody that "Muthalail vetta thriruthovom approm naata thriuthuvoom"
FYI.
ok.. first that boy tried to learn cycle. he needed his dad that time. then his father is need not after he got exprience.
then he wants to try bike.
then he wants to try car.
then he wants study...... etc...
now understood.......
Post a Comment