Sunday, November 4, 2007

"கிருஷ்ண"சாமியைக் காப்பாற்றியது ராமரா? முருகரா? - தினமலரின் மேதாவிக் கட்டுரை

உஷார்!

யாரைத்தான் நம்புவதோ?

இன்றைய தினமலரில் (04/11/07) வந்துள்ள "ஆராய்ச்சிக்" கட்டுரை.


08/11/2007 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் கிருஷ்ணசாமியின் மகனும், எம்.எல்.ஏவுமான விஷ்ணு பிரசாத் பேட்டி


இது தான் "தேசியத்" தமிழ் நாளிதழின் செய்திகளின் தரம்/இலட்சணம்.

செய்தியை செய்தியாய்த் தருவது என்பது வேறு. அதைப் பற்றிக் கட்டுரை, அதுவும் விஷமத்தனமான கட்டுரை ராமரைப் பற்றி எழுதும் போது என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளாமலே ஒரு Conclusion வேறு.

இது ஒரு சாம்பிள் தான். தினமலம் இது போல், செய்திகள் அலசல், கமெண்ட் என்று போட்டுக் கொண்டிருப்பவைகளுக்கும் ஒரு வெங்காய ஆதாரமும் இல்லை.

ஒரு வேளை தமிழ்க் கடவுள் முருகனின் "சக்தி"யை மறைத்து ஆரியக் கடவுளை தூக்கி விடும் பரம்பரை சதியோ? யார் கண்டது? :-)


8 comments:

RATHNESH said...

அட முட்டாள்களா,

ராமர் டாலரோ முருகன் டாலரோ எந்த எளவாக இருந்திருந்தாலும், குத்துப்பட்ட ஈட்டியோடு உடம்பினுள் இறங்கி இருந்தால் மெட்டல் ரத்தத்தில் கலந்து வேறு கூடுதல் பிரச்னைக்கும் தான் வழிவகுத்திருக்கும். கடவுளைக் கேவலம் பண்ண தினமலர் மாதிரியான பத்திரிக்கைகளே போதும். அவர்கள் ஆத்திகர் அல்லர், "ஆத்தீ . . . கர்".

நாமக்கல் சிபி said...

ஒருவேளை அவரு போட்டிருந்த டாலரிலே ஒரு பக்கம் முருகரும், ஒரு பக்கம் ராமரும் இருந்தார்களோ என்னவோ?

வினு said...

நாமக்கல் சிபி, உக்காந்து யோசிப்பீங்களோ?

வினு said...

ரத்னேஷ், அப்படியே டாலர் உள்ள போயிருந்தாலும், குத்துப்பட்ட காரில் பிள்ளையார் படம் இருந்தது. அதனால் தான் தப்பித்தார்னு ஒரு பிட்ட போட்டுருவாங்க. தமிழ்நாட்டு மக்களை நம்ப வைக்க நாமக்கல் சிபி மாதிரி உக்காந்து யோசிக்க வேண்டியது இல்லை. அது கிடக்கட்டும், நான் உங்களின் கருத்துக்களுக்கு ரசிகன். "முயல்" தொடர்ந்து படிப்பவன். வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

கிருஷ்ண சாமி பிழைத்தார் - அவ்வளவு தான். அது பற்றிய செய்திகளைப் படியுங்கள். ஆராய்வதற்கு அவை தகுதியானவை அல்ல

RATHNESH said...

சிபி சார், சூப்பர். ஒருபக்கம் ராமனும் இன்னொருபக்கம் முருகனும் இருந்திருக்கட்டும்; வேல்குத்தினைத் தாங்கியது ராமனா முருகனா?

வினு said...

அப்படிப் போடு அருவாள!

கோவி.கண்ணன் said...

குத்துப்படாமல் தடுக்க முடியலையே ?

ஆழமாக இறங்குவதை தடுத்ததா ?

எதாவது குரங்கு கூட்டம் எதிரிகளை துறத்தி இருந்தால் இராமர் காப்பாற்றினார் என்று சொல்லலாம்.
:)

எதையாவது வச்சு மூட நம்பிக்கை தங்க மூலாம் பூசியே வச்சிருப்பானுங்க.

பாவம் கிருஷ்ணசாமி உயிர்பொழைச்சது பொறுக்கலை போல இருக்கு. நெற்றியில் குங்கும பொட்டு வைத்திருந்து இரயிலுக்குள்ளே மாரடைப்பில் இறந்த அறநிலைய துறை அமைச்சராக இருந்த பிடிஆருக்கு முருகனும்ம், இராமனும் விரோதிகளா ? காப்ப்பாற்றி இருக்கலாமே